இந்தியாவில் தொடங்கியது அமேசான் ஆடியோ புக் சேவை

அமேசான் நிறுவனம் இறுதியாக ஆடியோ புக் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பெற மாதம் 199 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 30 நாட்களுக்கு இலவசமாக பெறலாம் என்றும் மூன்று ஆடியோ புக் தேர்வு செய்தால் 90 நாட்கள் இலவச ஆப்சன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடியோ புக்களை உங்கள் ஆண்டிராய்டு அல்லது ஐஒஎஸ் டிவைஸ் மூலம் ஆடியோ ஆப்களாக பெறலாம். அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் சர்வதேச ஆடியோ புக்குள் நாள்தோறும் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இந்த ஆடியோ புக்களை வாடிக்கையாளர்கள் இணைய தளம் வழியாகவும் கேட்க முடியும்.

இந்தியாவில் தொடங்கியது அமேசான் ஆடியோ புக் சேவை

அமேசான் பிரைம் போன்றே இந்தியாவில் ஆடியோ புக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியாவில் ஆடியோ புக் சப்கிரிப்ஷன்கள் நான்கில் ஒரு பங்கு விலையே வசூல் செய்யப்படுகிறது.

மாத மெம்பர்ஷிப் தவிர்த்து, 6 மற்றும் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன்கள் முறையே 1,345 மற்றும் 2,332 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி ஆடியோ புக் மெம்பர்கள், கூடுதலாக புக்களை வாங்கினால், 30 சதவிகித டிஸ்கவுண்ட் பெறலாம்.

இந்தியாவில் தொடங்கியது அமேசான் ஆடியோ புக் சேவை

அமேசான் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் பிரைம்-ஐ அறிமுகம் செய்தது. துவக்க ஆப்பராக 499 ரூபாய் என்றும் தொடர்ந்து ஓராண்டுக்கு 999 ரூபாய் என்றும் அறிவித்தது. இந்திய வாடிக்கையாளர்களிடம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து, பிரைம் வீடியோ, பிரைம் ரீடிங், அமேசான் மியூசிக் போன்றவற்றை அறிமுகம் செய்தது. தற்போது ஆடியோ சேவையை தொடங்கியுள்ளது. அமேசான் பிரைம் மெம்பர்களாக, உலக அளவில் 100 மில்லியன் மக்கள் உள்ளனர்.