ஆண்ட்ராய்டு ஒன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

உலகின் முதன்மையான ஸ்மார்ட்போன் இயங்குதளமான ஆண்ட்ராய்டு அடிப்படையில் மிக எளிமையான பயன்பாட்டிற்கு கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஒன் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு ஒன்

கூகுள் நிறுவனத்தின் தற்போதைய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முன்னெடுத்த நடவடிக்கைகளின் பின்னணியாக வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு ஒன் வளரும் நாடுகளில் உள்ள முதல் தலைமுறை ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு ஏற்றதாக வெளியிடப்பட்டது.

2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் ஒன்  மைக்ரோமேக்ஸ், கார்பன், இன்டெக்ஸ் மற்றும் ஸ்பைஸ் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் கூகுள் பட்ஜெட் ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல்களில் வெளியிட்டது. ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் களமிறக்கப்பட்டது.

ஆண்ட்ராய்டு Vs ஆண்ட்ராய்டு ஒன்

ஸ்டாக் ஆண்ட்ராய்டு எனப்படும் லினக்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இயங்குதளத்தை மொபைல் தயாரிப்பாளர்கள் தங்களுடைய மொபைல்க்கு ஏற்ற வகையில் பல்வேறு விதமான மாறுதல்களுடன் வடிவமைத்துக் கொள்கின்றனர். ஆனால் கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இதன் வாயிலாக முழுமையான ஆண்டராய்டு அனுபவத்தை பயனாளர்கள் பெறுவதற்கு மிக எளிமையாக கஸ்டமைஸ் செய்யப்பட்டதாகும்.

முதல்முறை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ஏற்றதாக மிக எளிமையாக வடிவமைக்கப்பட்ட இயங்குதளத்தில் எவ்விதமான பின்புலத்தில் மாற்றம் செய்யப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.

அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இந்த இயங்குதளத்தின் மீதான ஈர்ப்பு கூடுதலாக இருந்த நிலையில் இடைப்பட்ட காலத்தில் இந்த இயங்குதளம் பெரிதாக அறியமால் இருந்த நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனத்தின் மி ஏ1 மொபைல் போனில் வெளியானதை தொடர்ந்து மீண்டும் ஒன் இயங்குதளத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த மொபைலுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் ஆண்ட்ராய்டு பி மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் பெருமளவில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது.

Recommended For You