பல மாதங்கள் காத்திருப்புக்கு பின்னர் ஆண்ட்ராய்டு ஓரியோ அல்லது ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தின் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றதாக ஆண்ட்ராய்டு ஓரியோ பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்

ஆண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு ஓ என அறியப்பட்டிருந்த நிலையில் தற்போது ஓ என்றால் ஓரியோ என அதிகார்வப்பூர்வமாக கூகுள் நேற்றைய முழு சூரிய கிரகணத்தின் போது டெக் ஜாம்பவான் கூகுள் வெளியிட்டுள்ளது.

ஓரியோ இயங்குதளத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பற்றி தொடர்ந்து காணலாம்.

ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்

1. பாதுகாப்பான ஆண்ட்ராய்டு

முந்தைய பதிப்புகளில் இருந்து முற்றிலும் மேம்படுத்தப்பட்ட இயங்குதளமாக ஆண்டராய்டு ஓரியோ மிகுந்த பாதுகாப்பு தன்மையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2. பிக்சர் இன் பிக்சர் மோட்

ஒரு ஆப் பயன்பாட்டில் உள்ள போது அதே திரையில் வீடியோ கால் அல்லது மற்ற ஆப்கள் என இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்

3. ஸ்மார்ட் டெக்ஸ்ட் செலக்‌ஷன்

மிக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு திறனை இலகுவாக பயன்படுத்தும் வகையில் நாம் எந்த மாதிரியான ஸ்மார்ட் டெக்ஸ்ட் காப்பி செய்வதற்கு ஏற்ப அதன் சார்ந்த சேவைகளை பெற மிக வேகமாக செயல்படும். குறிப்பாக முகவரியை காப்பி செய்தால், அதைத்தேடுவதற்கு வசதியாக உடனடியாக கூகுள் மேப்ஸ் தோன்றும் வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்

4. நோட்டிஃபிகேஷன் டாட்

ஜிமெயில் உள்ளிட்ட ஆப்களில் அறிவிப்புகளை புள்ளி வடிவில் பெறும் வகையிலான அறிவிப்புகளுக்கு டாட்ஸ் போன்ற மிக எளிமையாக வழங்கியிருக்கின்றது.

ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்

5. ஸ்மார்ட் ஷேரிங்

பயனாளர்கள் விரும்பும் வகையில் பகிரும் அம்சத்தை செயல்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் பெற்றுள்ளது. அதாவது புகைப்படங்கள் மற்றும் காணொலி போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

6. பேட்டரி பெர்ஃபாமென்ஸ்

பாதுகாப்பு மட்டுமல்லாமல் மிக சிறப்பான வகையில் பேட்டரியின் ஆற்றலை சேமிப்பதற்கு பின்புலத்தில் இயங்கும் செயலிகளை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7. ஆடாப்டிவ் ஐகான்ஸ்

ஐகான்களை விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் வகையில் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதற்காக அடாப்டிவ் ஐகான் லாஞ்சர் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்

8. புதிய எமோஜிக்கள்

புதுவிதமான வடிவமைப்பில் எமோஜிக்களை ஐகான் வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்

புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தினை பெற்ற கூகுள் பிக்சல், பிக்சல் எக்ஸ்எல், நெக்ஸஸ் 6P, நெக்ஸஸ் 5X மற்றும் பிக்சல் சி ஆகிய மொபைல்களில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here