டிசம்பர் 1 முதல் ஆர்காம் வாய்ஸ் கால் சேவை நிறுத்தம்வருகின்ற டிசம்பர் 1, 2017 முதல் அனில் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வாய்ஸ் கால் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகின்றது. ஆனால் ஆர்காம் 4ஜி டேட்டா சேவையை தொடர்ந்து வழங்க உள்ளது.

ஆர்காம் வாய்ஸ் கால்

டிசம்பர் 1 முதல் ஆர்காம் வாய்ஸ் கால் சேவை நிறுத்தம்

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொலைத்தொடர்பு துறையில் மிக சவாலான பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி நன்மதிப்பை பெற்றிருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ சார்ந்த வகையிலான செல்லூலார் சேவைகளை வழங்கி வந்தது. கடந்த சில வருடங்களாக கடுமையான நெருக்கடியை சந்நித்து வந்த இந்நிறுவனத்தின் மொத்த கடன் தொகை ரூ.46,000 கோடி வரை எட்டியுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் எம்டிஎஸ் நெட்வொர்க்கை கையகப்படுத்தியதை தொடர்ந்து ஏர்செல் மற்றும் டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சி பல்வேறு சட்ட சிக்கல்களின் காரணமாக முறிவடைந்தது. எனவே தனது 2ஜி, டிடிஎச் மற்றும் வாய்ஸ் கால் ஆகிய சேவைகளை நிறுத்திக் கொள்ள உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாய்ஸ் கால் சேவை மட்டுமே முழுமையாக நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள ஆர்காம் 4ஜி சேவையை சார்ந்த டேட்டா திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 முதல் ஆர்காம் வாய்ஸ் கால் சேவை நிறுத்தம்

வரும் நவம்பர் 30ந் தேதி வரை மட்டுமே, வாய்ஸ் கால் சேவைகளை ஆர்காம் மற்றும் எம்டிஎஸ் பயனாளர்கள் பெறுவார்கள். அதன் பிறகு 4ஜி டேட்டா சார்ந்த சேவைகள் மட்டுமே கிடைக்கும். எனவே, வாய்ஸ் கால் சார்ந்த சேவைகளை பெற்று வரும் தமிழ்நாடு, ஆந்திரம்,  அரியானா, மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ( கிழக்கு, மேற்கு) உட்பட 8 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள பயனாளர்கள் மற்ற நெட்வொர்குகளுக்கு போர்ட் செய்வதற்கு டிசம்பர் 31ந் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here