2ஜி மற்றும் டிடிஎச் சேவையிலிருந்து வெளியேறும் ஆர்காம்ரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ஆர்காம் 2ஜி மற்றும் டிடிஎச் ஆகிய இரண்டு சேவைகளையும் நவம்பர் 30ந் தேதிக்குள் நிறுத்திக் கொள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முடிவெடுத்துள்ளது.

ஆர்காம் 2ஜி

2ஜி மற்றும் டிடிஎச் சேவையிலிருந்து வெளியேறும் ஆர்காம்

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கி வந்த ரிலையன்ஸ் அனில் அம்பானி கட்டுபாட்டில் செயல்பட்டு வந்த ஆர்காம் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவையுடன் டிடிஎச் ஆகியவற்றிலிருந்து குறைந்தபட்ச வருவாய் மற்றும் அதிக ஈழப்பீட்டை ஏற்படுத்தும் 2ஜி சேவை மற்றும் டிடிஎச் ஆகிய சேவைகளிலிருந்து முதற்கட்டமாக வெளியேற உள்ளது.

ஆனால் தொடர்ந்து 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை ஆர்காம் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர் சரிவு

ஆர்காம் நிர்வாக இயக்குனர் குர்திப் சிங் ஊழியர்களிடம் நாம் வயர்லெஸ் வணிகத்தின் இறுதிக் கட்டத்தினை அடைந்து விட்டோம், எனவே நவம்பர் 30ந் தேதி வரை மட்டுமே இந்தச் சேவையினை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அளிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் ரூ.46,000 கோடி வரையில் கடனில் சிக்கி உள்ளநிலையில், இந்த கடனை குறைப்பதற்கு ஆர்காம் மேற்கொண்ட ஏர்செல்-ஆர்காம் இணைப்பிற்கு எடுக்கப்பட்ட முடிவுகள் சட்ட சிக்கலால் தோல்வி அடைந்ததை தொடர்ந்து சந்தை மதிப்பு சரிந்து வரும் 2ஜி சேவையை நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளது.

2ஜி மற்றும் டிடிஎச் சேவையிலிருந்து வெளியேறும் ஆர்காம்

எனவே, தற்போது ஆர்காம் 2ஜி சேவையை பெற்று வரும் வாடிக்கையாளர்களை 3ஜி மற்றும் 4ஜி சார்ந்த தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

டிடிஎச்

வரும் நவம்பர் 21ந் தேதி வரை மட்டுமே இந்நிறுவனத்தின் டிடிஎச் ஒளிபரப்பு சேவை உரிமம் உள்ள நிலையில், இதனை ஆர்காம் புதுப்பிக்கும் எண்ணத்தை கைவிட்டுள்ளது. தற்போது சந்தையில் 2 சதவீத டிடிஎச் பங்களிப்பை பெற்று விளங்கும் ஆர்காம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்ற டிடிஎச் சேவைக்கு மாற்றப்பட உள்ளது.

2ஜி மற்றும் டிடிஎச் சேவையிலிருந்து வெளியேறும் ஆர்காம்

முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் டாடா டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என இரண்டு நிறுவனங்களும் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here