உலகின் முதல் கம்ப்யூட்டர் என நம்பப்படுகின்ற ஆண்டிகைதேரா மெக்கானிசம் கண்டுபிடிக்கப்பட்டு 115 ஆண்டுகள் ஆகின்றதை நினைவுகூறும் வகையில் இன்றைய கூகுள் டூடுல் வெளியாகியுள்ளது.

ஆண்டிகைதேரா மெக்கானிசம்

1902 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் வேலரீஸ் ஸ்டேய் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த மெக்கானிசம் ஆகும்.

கிரேக்கர்கள் கோள்கள் சார்ந்த மாற்றங்கள் உட்பட எதிர்கால மாற்றங்களை கணிக்க பயன்படுத்திய ஆண்டிகைதேரா மெக்கானிசம் முதலில் 85 பிசி காலகட்டம் என அறியப்பட்ட நிலையில் நவீன முறைகளின் அடிப்படையில் 150 பிசி காலக்கட்டத்தில் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

30 சிக்கலான கியர் பற்சக்கரங்களை கொண்டு மரத்தினால் ஆன பெட்டியில் வென்கலத்தால் கியர் சக்கரம் உருவாக்கப்பட்டுள்ளது.

பண்டைய கம்ப்யூட்டர் வடிவமைப்பு தான் இந்த ஆண்டிகைதேரா மெக்கானிசம் சிறப்பாகும்..! மிகவும் துல்லியமான முறையில் வானியல் சார்ந்த மாற்றங்களை கணக்கிடும் வகையிலான அமைப்பு என உறுதி செய்யப்பட்டுள்ளது.