பப்ஜி கேமுக்கு சவால் 72 மணி நேரத்தில் 10 மில்லியன் பிளேயர்களை பெற்ற கேம் : Apex Legends

டைட்டான்ஃபால் வீடியோ கேம் தயாரிப்பாளரின், புதிய அபேஎக்ஸ் லெஜென்ட்ஸ் (Apex Legends) பேட்டில் வீடியோ கேம் வெளியிட்ட 72 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.

சமீபத்தில் போர் அடிப்படையிலான வீடியோ கேம்கள் மிகுந்த வைராகி வரும் நிலையில், அடுத்ததாக மற்றொரு போர் அடிப்படையிலான கேமை உருவாக்கி வெளியிட்ட 3 நாட்களில் 1 கோடி பிளேயேர்களை பெற்று மிகப்பெரிய அளவில் வரவேற்பினை அபேஎக்ஸ் லெஜென்ட்ஸ் பெற்றுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் போன்ற கேம்களை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள டைட்டான்ஃபால் உருவாக்குநர்களின் அடுத்த பவர்ஃபுல்லான கேமாக அபேக்ஸ் லெஜென்ட்ஸ் விளங்குகின்றது.

அபேஎக்ஸ் லெஜென்ட்ஸ் வீடியோ விளையாட்டில், இலவசமாக விளையாட அனுமதிக்கின்ற இந்த கேமில்,  நீங்கள் அதிகபட்ச மூன்று வீரர்களில் ஒரு அணியில் விளையாட முடியும் இதில் முற்றிலும் அணியில் சார்ந்த விளையாட்டு ஆகும். ஒவ்வொரு குழுவிலும் 3 வீரர்கள், 20 அணிகள் என மொத்தமாக 60 பிளேயர்களுடன் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருட்களை சேகரித்து ஆயுதங்கள் மற்றும் உயிர் வாழ்வதற்கு போராடுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணித் தலைவர் இருக்க வேண்டும், எப்போது, எங்கு குதிக்க வேண்டும் என தீர்மானிக்கின்ற ஜம்ப்மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது.

பப்ஜி கேமுக்கு சவால் 72 மணி நேரத்தில் 10 மில்லியன் பிளேயர்களை பெற்ற கேம் : Apex Legends

Apex legends வீடியோ கேம் விளையாட்டில் மொத்தம் 8 விதமான லெஜென்ட்ஸ் அல்லது கதாபாத்திரங்களை கொண்டிருக்கும்.

Gibraltar — Shielded Fortress
Wraith — Interdimensional Skirmisher
Blood Hound — Technological Tracker
Lifeline — Combat Medic
Pathfinder — Forward Scout
Bangalore — Professional Soldier
Caustic — Toxic Trapper
Mirage — Holographic Trickster