அபெக்ஸ் லெஜண்ட்ஸ் 25 மில்லியன் டவுன்லோடு சாதனை படைத்தது

பப்ஜி , போர்நைட் போன்ற கேம்களுக்கு சவாலான அபெக்ஸ் லெஜண்ட்ஸ், ஒரே வாரத்தில் 25 மில்லியன் அல்லது 2.5 கோடி மக்களால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக ஒரே சமயத்தில் 20 லட்சம் பிளேயர்கள் விளையாடிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கேம் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் 25 மில்லியன் டவுன்லோடு சாதனை படைத்தது

விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு வழங்கப்பட உள்ள அபெக்ஸ் லெஜண்ட்ஸ், தற்போது மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன், சோனி பிளே ஸ்டேஷன் 4 (பிஎஸ்4) கன்லோல்கள் மற்றும் கணினி ஆகியவற்றில் மட்டும் இலவமாக கிடைத்து வருகின்றது. முன்னதாக மூன்று நாட்களில் ஒரு கோடி பிளேயர்களை பெற்று சாதனையை படைத்திருந்தது.

சர்வதேச அளவில் போர் அடிப்படையிலான வீடியோ கேம்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. குறிப்பாக முன்பு வெளிவந்த பப்ஜி, ஃபோர்நைட் போன்றவற்றை தொடர்ந்து வெளியாகியுள்ள அபேக்ஸ் லெஜண்ட்ஸ், பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விளையாட்டில் இதுவரை 2.5 கோடி பயனாளர்களை கொண்டு, வார இறுதியில் அதிகபட்மாக ஒரே சமயத்தில் 20 லட்சம் பேர் விளையாடியுள்ளதாக இதன் தயாரிப்பாளரான EA மற்றும் ரிஸ்பான் எண்டெர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டியாளர்களின் வீடியோ கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கின்ற நிலையில் Apex Legends கேம் விரைவில் மொபைல் போன்களுக்கு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் அபேக்ஸ் லெஜண்ட்ஸ் அறிமுகம் செய்யும்பட்சத்தில் ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய வ்வேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த வீடியோ கேம் வெளியாகும் பட்சத்தில் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் வீடியோ கேம்கள் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் 25 மில்லியன் டவுன்லோடு சாதனை படைத்தது

அபேக்ஸ் லெஜன்ட்ஸ்

அபேக்ஸ் லெஜன்ட்ஸ் வீடியோ விளையாட்டில், இலவசமாக விளையாட அனுமதிக்கின்ற இந்த கேமில்,  நீங்கள் அதிகபட்ச மூன்று வீரர்களில் ஒரு அணியில் விளையாட முடியும் இதில் முற்றிலும் அணியில் சார்ந்த விளையாட்டு ஆகும். ஒவ்வொரு குழுவிலும் 3 வீரர்கள், 20 அணிகள் என மொத்தமாக 60 பிளேயர்களுடன் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருட்களை சேகரித்து ஆயுதங்கள் மற்றும் உயிர் வாழ்வதற்கு போராடுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணித் தலைவர் இருக்க வேண்டும், எப்போது, எங்கு குதிக்க வேண்டும் என தீர்மானிக்கின்ற ஜம்ப்மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது.

Apex legends வீடியோ கேம் விளையாட்டில் மொத்தம் 8 விதமான லெஜென்ட்ஸ் அல்லது கதாபாத்திரங்களை கொண்டிருக்கும்.

Gibraltar — Shielded Fortress
Wraith — Interdimensional Skirmisher
Blood Hound — Technological Tracker
Lifeline — Combat Medic
Pathfinder — Forward Scout
Bangalore — Professional Soldier
Caustic — Toxic Trapper
Mirage — Holographic Trickster

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் 25 மில்லியன் டவுன்லோடு சாதனை படைத்தது