பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்உலகின் மிக நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, இதற்கு ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஆப்பிள் மன்னிப்பு

பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்

பேட்டரி பிழை வாயிலாக ஆப்பிள் ஐபோன் வேகத்தை குறைத்ததாக ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளதை தொடர்ந்து, பேட்டரி மாற்றுவதற்கான கட்டணத்தை 50 சதவீதத்துக்கு குறைவாக குறைப்பதாக அறிவித்துள்ளது.

பழைய ஐபோன் சாதனங்களின் ஆயுளை அதிகரிக்கும் நோக்கிலே, சில ஐபோன்களை வேகத்தினை குறைத்ததாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஐபோன் 6 அல்லது அதற்கு அடுத்த பதிப்பு ஐபோன்களை வாங்கியவர்களுக்கு, உத்தரவாத காலத்திற்கு பிறகான பேட்டரியின் விலையை 79 (ரூ.5100) அமெரிக்க டாலர்களிடமிருந்து 29 (ரூ.1900) டாலர்களாக குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட் மூலம் பேட்டரியின் நிலையை மென்பொருள் வாயிலாக அறிந்து கொள்ள வழி செய்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

டிசம்பர் 20-ம் தேதி ஐபோன்களின் மென்பொருள், சாதனத்தின் பேட்டரி பிரச்சனை ஏற்படும் போது ஐபோனின் வேகத்தை குறைக்கும் திறன் கொண்டிருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. லித்தியம் பேட்டரிகள் நீண்ட உபயோகத்திற்கு பின் ஐபோன்களை திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆக வைக்கும் என தெரிவித்தது.

பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்
ஐபோனின் பாகங்களுக்கு மின்சாரம் சீரற்ற முறையில் பாய்ந்தால் ஐபோனின் மென்பொருள் சாதனத்தை ஸ்விட்ச் ஆஃப் ஆக வைக்கும் வகையில் உருவாகப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது. இவ்வாறு செய்யும் போது ஐபோனின் உதிரிபாகங்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்பிள் சாதனங்களின் ஆயுளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்

பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here