Apple: ஆப்பிள் நியூஸ்+, ஆப்பிள் கார்டு, ஆப்பிள் பே அறிமுகமானது

ஆப்பிள் நிறுவனம், பிரீமியம் செய்திகள் வழங்குவதனை ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் கார்டு, ஆப்பிள் பே சேவையுடன் கேமிங் சார்ந்த ஆப்பிள் ஆர்கேட் மற்றும் டிவி சேனல்களை சார்ந்த ஆப்பிள் டிவி பிளஸ் சேவையும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆப்பிளின் பல்வேறு சேவைகளை அறிமுக விழாவில் மிக முக்கியமாக எந்தவொரு விளம்பர நிறுவனமும் உங்களை டிராக்கிங் செய்யாத வகையில் பல்வேறு சேவைகளை செயற்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

apple news

ஆப்பிள் நியூஸ் பிளஸ் என்றால் என்ன ?

செய்திகளை வழங்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் ஆப்பிள் நியூஸ் பிளஸ் ஆப் மூலம் பயனாளர்கள் மாதந்திர சந்தா செலுத்தி, பிரசத்தி பெற்ற டிஜிட்டல் வலைதளங்கள், செய்தித்தாள்கள், மற்றும் 300க்கு அதிகமான பிரசத்தி பெற்ற இதழ்கள் என பலவற்றை உள்ளடக்கியதாக இந்த சேவை வழங்கப்பட உள்ளது.

உணவு முதல் பொழுதுப்போக்கு வரை உள்ள இதழ்கள் குறிப்பாக பிரிவுகள் வாரியாக வழங்கப்பட்டு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் படிக்க வழி வகுப்பதுடன், சந்தா முறையில் ஆப்பிள் நியூஸ்+ அறிமுகம் செய்யப்படுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்கா , கனடாவில் கிடைக்க தொடங்கியுள்ள இந்த சேவைக்கு மாதந்திர கட்டணமாக $ 9.99 (ரூ.700), கனடாவில் கட்டணம் 12.99 டாலாராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Apple launches apple card

ஆப்பிள் கார்டு என்றால் என்ன ?

ஆப்பிள் கார்டு என்பது ஒரு விரிச்சுவல் ரக கிரெடிட் கார்டு ஆகும். இந்த கார்டு ஆனது ஆப்பிள் ஐபோன்களில் உள்ள ஆப்பிள் வாலட் ஆப் மூலம் கிடைக்க உள்ளது. இந்த கார்டினை கொண்டு மிக இலகுவான முறையில் டிஜிட்டல் சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும்.

apple card

மிக இலகுவான செயல்முறையில் கிடைக்கின்ற இந்த கிரெடிட் கார்டுக்கு என எவ்விதமான பிராசெஸிங் கட்டணமும் வசூலிக்கப்படாது. குறைந்த வட்டி, அதிகப்படியான தனியுரிமை மற்றும் நம்பகமான பாதுகாப்பினை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள் கார்டு சேவையானது, இந்நிறுவன ஆப்பிள் பே மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆப்பிள் டெய்லி கேஷ் 

இந்த கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, தினசரி கேஸ்பேக் சலுகையை பெறலாம். குறிப்பாக 2 சதவீத கேஸ்பேக் ஆப்பிள் விரிச்சுவல் கார்டு பரிவர்த்தனைக்கும், 3 சதவீத கேஸ்பேக் ஆப்பிள் நிறுவன ஸ்டோர் பரிவர்த்தனைக்கும், மற்றும் பிசிக்கல் கார்டு பரிவர்த்தனைக்கு  ஒரு சதவீத கேஸ்பேக் வழங்க உள்ளது.

கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற ஆப்பிள் கார்டு ஆனது மாஸ்டர்கார்டு பயனர் முகப்பை பெற்று இந்த அட்டையில், எந்தவொரு தகவலையும் நேரடியாக காண இயலாது. குறிப்பாக அட்டையின் இறுதி தேதி, சிவிவி எண், கையெழுத்து போன்றவை காண கிடைக்காது. ஆப்பிள் கார்டு ஆனது டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். முதற்கட்டமாக அமெரிக்காவில் கிடைக்க உள்ள இந்த சேவை மற்ற நாடுகளிலும் விரிவுப்படுத்தலாம்.

apple card

ஆப்பிள் பே என்றால் என்ன ?

டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள வழங்கப்படுள்ள ஆப்பிள் பே வசதி மூலம் இலகுவான முறையில் பணத்தை அனுப்பலாம் மற்றும் பொருட்களை வாங்கலாம்.

apple daily cash