செப்டம்பர் 23.., இந்தியாவின் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவக்கம்

வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவிற்கு என பிரத்தியேகமான ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் மூலம் அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளும் நேரடியாக விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கின்ற அதே அனுபவத்தினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோரில் வல்லுநர்கள் எந்தவொரு மேக் தயாரிப்புகள் தனிப்பயனை கட்டமைப்பதில் இருந்து புதிய சாதனங்களை அமைப்பது வரை உதவுவார்கள். வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நேரடியாக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து ஆலோசனைகள் வழிகாட்டுதலை பெறலாம் மற்றும் புதிய தயாரிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் நிதி பரிவர்த்தனை விருப்பங்கள், வர்த்தக திட்டங்கள், மாணவர்களுக்கு சிறப்பு விலை மற்றும் பாகங்கள் மற்றும் ஆப்பிள் கேர் + மீதான தள்ளுபடிகள் ஆகியவற்றை வழங்கும்.

அக்டோபரில், புகைப்படம் மற்றும் இசையை மையமாக உள்ளூர் கிரியேட்டிவ் புரோக்களை உருவாக்க, ஆப்பிள் நிறுவனம் இலவச ஆன்லைன் வகுப்புகளை தமிழ், ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்க உள்ளது.

ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைனில் இருந்து வரும் அனைத்து ஆர்டர்களும் தொடர்பு இல்லாத விநியோக முறையுடன் வழங்கப்படும். பேமென்ட் விருப்பங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இஎம்ஐ, ரூபே, யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் டெலிவரி ஆன் கிரெடிட் கார்டு ஆகியவை அடங்கும். ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் பற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் வெளியாகும்.