ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் ஆப்பிள் ஆர்கேட் (Apple Arcade) என்ற கேமிங் சார்ந்த சந்தா சேவையை பிரத்தியேகமான விளையாட்டுகளுடன் அறிமுகம் செய்துள்ளது. இங்கே கிடைக்கின்ற பல கேம்கள் வேறு எங்கேயும் கிடைக்காது என ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சார்ந்த அம்சமானது. தனது ஐபோன், ஐபேட், ஆப்பிள் டிவி, மேக் ஓஎஸ்களில் கிடைக்கும் வகையில் சுமார் 150க்கு மேற்பட்ட நாடுகளில் வழங்க உள்ளது. ஆப்பிள் ஸ்டோரில் பிரத்தியேகமான ஆர்கேட் பகுதி வழங்கப்பட்டிருக்கும்.
ஆப்பிள் ஆர்கேட் என்றால் என்ன ?
கேமிங் சார்ந்த சேவையாக தொடங்கப்பட்டுள்ள ஆப்பிள் ஆர்கேட் மூலம் , தனது பயனாளர்களுக்கு சிறப்பான கேமிங் சார்ந்த அனுபவத்தை வழங்குவதுடன், இந்த சேவையில் எவ்விதமான விளம்பரமும் இடம்பெறாது. மேலும் எந்தவொரு தனிநபர் தகவல் மற்றும் விபரங்கள் மற்றவர்களால் டிராக்கிங் செய்ய இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் இலவச கேம் மட்டுமல்லாமல் பல்லாயிரகணக்கான கட்டணம் செலுத்தி விளையாடக்கூடிய விளையாட்டுகளும் இங்கே கிடைக்கும். இதுதவிர இந்த கேமிங் சந்தாவில் உள்ள கேம்களில் கூடுதலான வசதிகளை பெற தனியான கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கே இடம்பெற உள்ள விளையாட்டுகளை இலகுவாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த சேவைக்கான கேமிங் சந்தா தொடர்பான விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கூகுள் ஸ்டேடியாவிற்கு போஇயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
100க்கு மேற்பட்ட பிரத்தியேகமான விளையாட்டுகள் ஆர்கேட் பிரிவில் மட்டும் கிடைக்கும். முன்னணி கேம் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை ஆப்பிள் வழங்க உள்ளது. வரும் செப்டம்பர் 2019-ல் 150க்கு அதிகமான நாடுகளில் ஆர்கேட் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.