ஆப்பிள் ஐபேட் ஏர் என அழைக்கப்பட்ட மாடலை தற்பொழுது 9.7-இஞ்ச் திரையுடன் ஆப்பிள் ஐபேட் என பெயர் மாற்றி ரூ.28,900 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த ஐபேட் கருவியில் A9 பிராஸசர் இடம்பெற்றுள்ளது.

ரூ.28,900 விலையில் புதிய ஆப்பிள் ஐபேட் அறிமுகம்

 ஆப்பிள் ஐபேட்

  • ஐபேட் ஏர் என அழைக்கப்பட்ட மாடலுக்கு புதிய பெயராக ஆப்பிள் ஐபேட் என மட்டும் பெயரிட்டுள்ளது.
  • ரூ.28,900 ஆரம்ப விலையில் ஐபேட் தொடங்குகின்றது.
  • பழைய A8X சிப்களுக்கு மாற்றாக புதிய 64-bit A9 பிராஸசர் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் பிரசத்தி பெற்ற டெப்ளெட்களில் முதன்மையான ஐபேட் தற்பொழுது மிக சிறப்பபான வகையில் படங்கள் மற்றும் வீடியோ உள்பட பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் வகையில் முந்தைய ஐபேட் ஏர் மாடலை விட சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் வகையில் பழைய A8X சிப்களுக்கு மாற்றாக புதிய 64-bit A9 சிப்செட்களை பெற்று வந்துள்ளது.

பள்ளி , இல்லம் மற்றும் வேலைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியில் ஸ்மார்ட் ரெட்டினா திரையுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட சிறப்புமிக்க 1.3 மில்லியன் ஆப்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய 9.7 அங்குல ஆப்பிள் ஐபேட் மாடல் இருவிதமான வேரியண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

  • Wi-Fi மாடல் – ரூ. 28,900
  • Wi-Fi+Cellular – ரூ. 39,900

மேலும் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாலியூரேதேன் டேப்ளெட் சிறப்பு ஸ்மார்ட் கவர்கள் விலை ரூ.3,700 ஆகும். இதன் வண்ணங்கள் கிரே, வெள்ளை, நீளம் மற்றும் பிங்க் ஆகும்.

வருகின்ற மார்ச் 24ந்தேதி முதல் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய ஐபேட் இந்தியாவில் ஏப்ரல் மாத மத்தியில் விற்பனைக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here