ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மொபைல்கள் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பாக சிவப்பு வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு வண்ணம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 7 சிவப்பு வண்ணத்தில் அறிமுகம்

ஆப்பிள் ஐபோன் 7 சிவப்பு நிறம்

  • RED அமைப்புடன் சேர்ந்து செயல்படுவதை நினைவுப்படுத்தும் வகையில் சிவப்பு வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • சிவப்பு வண்ண வேரியண்ட்கள் ரூ.82,000 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • 128GB மற்றும் 256GB வேரியண்ட்களில் மட்டுமே இந்த நிறம் கிடைக்கும்.
  • இந்தியாவில் ஏப்ரல் மாதம் கிடைக்கலாம்.

எய்ட்ஸ் நோயக்கு எதிராக செயல்படுவதனை கொண்டாடும் வகையிலே இந்த சிறப்பு சிவப்புநிற வேரியன்ட் மாடல் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிவப்பு வண்ண மாடல் மார்ச் 24 முதல்  ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, நெதர்லாந்து, நியுசிலாந்து, ரஷ்யா, சிங்கப்பூர், தென்கொரியா, ஸ்பெயின், சுவிடன், சுவிட்சர்லாந்து, தாய்வான், தாய்லாந்து, அமெரிக்கா . இங்கிலாந்து மற்றும் அரபு எமிரேட்ஸ் போன்றவற்றில் கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 7 சிவப்பு வண்ணத்தில் அறிமுகம்

இந்தியா உள்பட மேலும் பல நாடுகளில் ஏப்ரல் முதல் விற்பனைக்கு சிவப்பு நிறத்திலான மாடல்கள் கிடைக்கும்.

இந்த சிறப்பு மாடல் குறித்து டிம் குக் கருத்து தெரிவிக்கையில் “ எங்களுடைய மிகப்பெரிய மாடலில் சிவப்பு (ஐபோன்) நிறுத்துடன் அறிமுகம் சேர்த்திருப்பது சிவப்பு (RED) அமைப்புடன் இணைந்து செயல்படுவதனை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது , என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here