வரும் செப்., 12ந் தேதி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஆப்பிள் ஐபோன் 8 என்ற பெயருக்கு மாற்றாக ஆப்பிள் ஐபோன் X என்ற பெயரிலே அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் X என்ற பெயரில் ஐபோன் 8 மொபைல் வரலாம்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

இந்த வருடத்தின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள ஆப்பிள் ஐபோன் 8 மொபைல் ஆனது ஐபோன் X என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என நெதர்லாந்து நாட்டின் iCulture இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில் தொலைத்தொர்பு நிறுவனத்தின் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் X என்ற பெயரில் ஐபோன் 8 மொபைல் வரலாம்

கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள புதிய ஸ்டீவ ஜாப்ஸ் தியேட்டர் அரங்கில் வெளியிடப்பட உள்ள ஐபோன் 10வது ஆண்டுவிழா ஸ்மார்ட்போன் மீதான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில் ரோமானிய எண் அடிப்பையிலான X என்பது 10 என்ற எண்ணாக உள்ளதால் ஐபோன் 8 என அழைக்கப்படாமல் ஐபோன் X என்ற விற்பனைக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.

ஐபோன் X அல்லது ஐபோன் 8 அல்லது ஐபோன் எடிசன் என பல்வேறு பெயர்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் 5.8 அங்குல திரையுடன் 18:9 அகன்ற திரை கொண்டதாக OLED பீசல் இல்லாத வகையில் முகத்தினை கொண்டு திறக்கும் வகையிலான அன்லாக் அமைப்பினை கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் X என்ற பெயரில் ஐபோன் 8 மொபைல் வரலாம்

இதுதவிர,ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் 64GB, 256GB, மற்றும் அதிகபட்சமாக 512GB என மூன்று விதமான சேமிப்புபெற்ற வகைகளில் வெளியிடப்படலாம்.

காத்திருங்கள், செப்டம்பர் 12ந் தேதி வெளியிடப்பட உள்ள ஐபோன் எக்ஸ் மாடல் செப்டம்பர் 22ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்படலாம்.

ஆப்பிள் ஐபோன் X என்ற பெயரில் ஐபோன் 8 மொபைல் வரலாம் ஆப்பிள் ஐபோன் X என்ற பெயரில் ஐபோன் 8 மொபைல் வரலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here