இந்த வருடத்திற்கான டெக் உலகின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ள ஆப்பிள் ஐபோன் 8 ஸ்மார்ட்போன் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கில் செப்டம்பர் 12ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8 செப்,12-ல் அறிமுகம்

 

ஆப்பிள் ஐபோன் 8 செப்டம்பர் 12 முதல்

ஆப்பிள் நிறுவனத்தின் கபெர்டினோ, கலிபோர்னியா பகுதியில் புதிய வளாகத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரிலான தியேட்டரில் 10வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனைக்கு வரவுள்ள சிறப்பு ஆப்பிள் ஐபோன் 8 தவிர ஐபோன் 7S, ஐபோன் 7S பிளஸ் உள்ளிட்ட மாடல்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8 செப்,12-ல் அறிமுகம்

விற்பனையில் உள்ள ஐபோன்களை விட பல்வேறு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் விலை உயர்ந்த மொபைலாக வரவுள்ள ஐபோன் 8ல் ஐபோன் 10 வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு சிறப்பு எடிசானக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோனில் அதிகபட்சமாக 512GB சேமிப்பு திறன் பெற்ற மாடலும் வரக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் 64GB, 256GB, மற்றும் 512GB என மூன்று விதமான வகைகளில் வெளியிடப்படலாம்.

புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8 செப்,12-ல் அறிமுகம் புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8 செப்,12-ல் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here