தொடர்ந்து பல மாதங்களாக ஆப்பிள் ஐபோன் 8 மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் செப்டம்பர் 12ந் தேதி புதிய ஐபோன் ஃபிளாக் ஷீப் மாடல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐபோன் 8 அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

ஐபோன் 8 விபரம்

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு விதமான தகவல்கள் மற்றும் நுட்ப விபரங்கள் தொடர்ந்து கசிந்து வந்தாலும், ஆப்பிள் அதிகாரவப்பூர்மாக எவ்விதமான அறிவிப்பினையும் வெளிப்படுத்தாமலே இருந்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஐபோன் செப்டம்பர் மாதத்தில் முதல் வாரம் (6ந் தேதி) அல்லது இரண்டவாது வாரத்தில் (12ந் தேதி) அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஆண்டில் ஐபோன் 8, ஐபோன் 7S, ஐபோன் 7S பிளஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐபோன் 8 அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

ஐபோன் 10 வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு சிறப்பு எடிசானக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோனில் அதிகபட்சமாக 512GB சேமிப்பு திறன் பெற்ற மாடலும் வரக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் 64GB, 256GB, மற்றும் 512GB என மூன்று விதமான வகைகளில் வெளியிடப்படலாம்.

செப்டம்பர் 12-ம் தேதி அறிமுக விழா நடைபெற்றால் செப்டம்பர் 15 முதல் 22-ம் தேதிவாக்கில் முன்பதிவு தொடங்கப்பட்டு அடுத்த சில வாரங்களில் டெலிவரி தொடங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

ஐபோன் 8 அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

இந்த மொபைல் தொடர்பாக முன்பு வெளிவந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் OLED பெசல்-லெஸ் பேனல், ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, டூயல் பிரைமரி கேமரா,  செயற்கை நுண்ணறிவு திறன் , 3D சென்சிங் வசதி கொண்ட முன்பக்கம் மற்றும் பின்புற கேமரா, முகத்தினை உணர்ந்து செயல்படும் அம்சம், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வாட்டர் ப்ரூஃப் , டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டிருக்கலாம்.

ஐபோன் 8 அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here