ஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்

உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்ய ஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்களை பயன்படுத்த அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று நடவடிக்கை எடுத்து வருகிறது.

உணவு கோளாறுகளுக்கான வட கலிபோர்னியா பல்கலைக்கழக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் 18 வயது கொண்டவராக இருந்தாலும் ஐபோன் (மாடல் 5 அல்லது அதற்கு மேற்பட்ட மாடலை) பயன்படுத்தினால், உங்களுக்கு இருக்கும் தற்போதைய மற்றும் வாழ்நாள் அளவிலான உணவினால் ஏற்படும் கோளாறுகளை அறிந்து கொள்ள முடியும். இதை தெளிவாக அறிந்து கொள்ள “Binge Eating Genetics Initiative” (BEGIN) என்று பெயரிடப்பட்ட பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.

ஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்

இதன் பயிற்சி முக்கிய நோக்கம், உங்கள் பரம்பரை உணவு பழக்கவழக்கங்களை ஆய்வு செய்து உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்வதேயாகும். உலகளவில் இந்த நோயால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆராய்ச்சியில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, உணவு பழக்கம் ஆகியவற்றை பொறுத்து 30 நாட்களில் சரியாகி விடும். ஒருமுறை நீங்கள் BEGIN பயிற்சியில் நுழைந்து விட்டால் உங்கள் ஐபோனில் BEGIN BOX அனுப்பபட்டு, உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.