ஃபிளிப்கார்ட் : ஆப்பிள் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் வருகை விபரம்சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் X, ஆப்பிள் ஐபோன் 8, மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய கருவிகள் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.

ஃபிளிப்கார்ட்

ஃபிளிப்கார்ட் : ஆப்பிள் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் வருகை விபரம்

அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளில் ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய கருவிகள் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட உள்ள ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் கருவிகள் ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இரு மாடல்களும் செப்டம்பர் 29ந் தேதி முதல் டெலிவரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐ ஃபோன் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூபாய் ஒரு லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஐஃபோன் X (ஐபோன் 10) மாடலுக்கு முன்பதிவும் பிளிப்கார்டு இணையதளத்தில் அக்டோபர் 27ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட்டு நவம்பர் 3ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்படலாம்.

ஃபிளிப்கார்ட் : ஆப்பிள் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் வருகை விபரம்

ஐபோன் 8 பிளஸ் கருவியில் ரியர் கேமரா இரு 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா ஆப்ஷனை கொண்டதாக வந்துள்ளமது. முன்புறத்தில் 7 மெகாபிக்சல் சென்சார் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 4.7 அங்குல ஐபோன் 8 கருவியில் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் மட்டுமே பெற்றுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 8 விலை பட்டியல்

ஆப்பிள் ஐபோன் 8 64GB -ரூ.64,000

ஆப்பிள் ஐபோன் 8 256GB – ரூ.77,000

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் விலை

ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் 64GB – ரூ.73,000

ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் 256GB – ரூ.86,000

ஃபிளிப்கார்ட் : ஆப்பிள் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் வருகை விபரம்

சிறப்பான பேட்டரி பெர்ஃபாமென்ஸ், ஆப்பிள் சிறி வாய்ஸ் அசிஸ்டென்ஸ், அனிமோஜி, ஃபேஸ் ஐடி , இரட்டை கேமரா செட்டப், ஐஓஎஸ் 11 இயங்குதளம் என பல்வேறு அம்சங்களை பெற்ற ஆப்பிள் ஐபோன் 10 மாடல் 10வது ஐபோன் ஆண்டுவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 10 விலை பட்டியல்

ஆப்பிள் ஐபோன் 10 64GB – ரூ.89,000

ஆப்பிள் ஐபோன் 10 256GB – ரூ.1,02,000

ஃபிளிப்கார்ட் : ஆப்பிள் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் வருகை விபரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here