ஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்

சத்தமில்லாமல் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஆப்பிள் டிவி யூடியூப் சேனல் தொடங்கப்பட்டள்ளது. இந்த யூடியூப் சேனலில் பொழுதுபோக்கு, சினிமா டிரெய்லர், பிரபலங்கள் பேட்டி உட்பட பல்வேறு வீடியக்கள் தரவேறப்படுள்ளன.

ஆல் இன் ஒன் ஆப் என குறிப்பிடப்பட்டு ஆப்பிள் டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சேனலில் தற்போது வரவுள்ள படத்தின் ட்ரெயிலர்கள் உட்பட பலவேறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆப்பிள் டிவி

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேனலில் இனி, பல்வேறு பிரத்தியேகமான வீடியோக்கள், ட்ரெயிலர்கள் என பல்வேறு அம்சங்களை இதன் மூலம் வழங்க வாய்ப்புகள் உள்ளது.

முதற்கட்டமாக ஆப்பிள் டிவியின் சேனலில், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், கடந்த மாதம் நடைபெற்ற ஆப்பிள் டிவி அறிமுக நிகழ்ச்சி, இந்த சேனல் உருவான விதம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், படிப்படியாக பாடல்கள், கரோக், மேக்கிங் வீடியோ என பலவும் இடம் பெறுவதுடன் புதிய எக்ஸ்குளூசிவ் ஆன்லைன் வீடியோக்கள், வெப் சீரிஸ், பிரபலங்களின் பேட்டி உள்ளிட்டவை வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

அடுத்த மாதம் வெளியாக உள்ள புதிய tvOS 12.3 மற்றும் iOS 12.3 பதிப்புகளில் ஆப்பிள் டிவி செயலி புதுப்பிக்கப்பட்டு பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.