பெங்களூருவில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் ஐபோன் SE ஸ்மார்ட்போன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் SE விற்பனைக்கு கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் SE

இந்திய சந்தையில் முதன்முறையாக ஆப்பிள் ஐபோன்கள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போனை மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெங்களூரில் அமைந்துள்ள தாய்வான் தயாரிப்பாளரான விஸ்ட்ரான் (Wistron Corp) வாயிலாக உற்பத்தி செய்யப்படுகின்ற ஆப்பிள் ஐபோன் எஸ்இ ரூ.20,000 விலை குறைவாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வந்த இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது 16GB மாடல் ரூ.39,000 விலையிலும், 64GB மாடல் ரூ.44,000 விலையிலும் வெளியிடப்பட்டது.

இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுவதனால் ஐபோன் எஸ்இ16 ஜிபி மாடல் ரூ.20,000 என தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சில தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளின்படி ரூ.6500 வரை விலை குறைக்கப்பட்டு ரூ. 27,900 என்ற விலையில் ஆரம்ப விலை மாடல் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் அதிகார்வப்பூர்வமாக விலை விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த மாத இறுதியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாடல் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.