apple-unveils-apple-tv-plus

ஆப்பிள் நிறுவனம், புதிதாக ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+) வீடியோ சந்தா சேவையின் மூலம்  பிரத்தியேகமான நிகழ்ச்சிகள் , ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றை பயனாளர்கள் பெற இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் டிவி, மேக் ஓஎஸ் , ஐபோன் போன்றவற்றுடன் ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் கருவிகளில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை வழங்க சுமார் 100 க்கு மேற்பட்ட நாட்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் டிவி பிளஸ் சிறப்புகள்

வரும் மே மாதம் முதல் பல்வேறு நாடுகளில் கிடைக்க உள்ள புதிய ஆப்பிள் டிவி பிளஸ் சேவையின் மூலம், பயனாளர்கள் எண்ணற்ற தொலைக்காட்சி சேனல்கள், வீடியோ நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் கிடைக்க உள்ளன.

ஹாலிவுட் பிரபலங்களான ஓபரா வின்ப்ரே, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜெனிபர் அனிஸ்டன், ரீஸ் விதர்ஸ்பூன், ஜே.ஜே. ஆப்ராம்ஸ், ஜேசன் அம்மாவா, போன்றோரின் டாக் ஷோ நிகழ்ச்சிகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

apple-unveils-apple-tv-plus

பிரத்தியேகமான வீடியோக்கள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் எவ்விதமான விளம்பரமுமின்றி கிடைக்க உள்ளது. கூடுதலாக ஆப்பிள் டிவி பிளஸ் சந்தா திட்டடத்தில் பயனாளர்கள் 150 க்கு மேற்பட்ட ஸ்ட்ரீமிங் சேவைகளான அமேசான் பிரைம், ஹலு உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் சேவைகளை பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.