ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளியீடுஉலகின் முதன்மையான ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பாளராக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளியீடு

ஆப்பிள் ஐபோன் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் X சிறப்பு எடிசன் உட்பட ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ் ஆகிய கருவிகளுடன் ஆப்பிள் டிவி (2017) மாடலும் கலிஃபோர்னியா -வில் உள்ள ஆப்பிள் வளாகத்தில் வெளியிடப்பட்டது.

முந்தைய வாட்ச் சீரிஸ் 2 மாடலை விட 70 சதவீத வேகத்துடன் இயங்கும் வகையில் மிக சிறப்பான வசதிகளை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலில் செல்லூலார் ஆதரவு மற்றும் எல்டிஇ ஆதரவினை பெற்றதாக வந்துள்ளது.

இந்த ஆப்பிள் வாட்சில் அதிகபட்ச வசதியாக எலக்ட்ரானிக் சிம் பெற்று செல்லூலார் இணைப்பை பெற்றுள்ள நிலையில், இதன் வாயிலாக அழைப்புகள் மேற்கொள்ள மற்றும் அழைப்புகளை பெற வழிவகுக்கும். ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் வரைபட ஆதரவு மற்றும் நீச்சல் நேரங்களில் பயன்படுத்தும் வகையில் நீர்புகா அம்சத்துடன், ஆப்பிள் ஹார்ட் சென்சார் பெற்றுள்ளதால் இதய துடிப்பை கண்கானிக்கும் வகையில் வந்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 4 கொண்டு இயக்கப்படுகின்ற வாட்ச் சீரிஸ் 3 கருவியில் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய நிறங்களுடன் ஆப்பிள் சிறி வாய்ஸ் அசிஸ்டென்ட் பெற்று நாள் முழுமைக்கான பேட்டரிஅம்சத்தை கொண்டதாக வந்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளியீடு

வாட்ச் சீரிஸ் 3 ஸ்பேஸ் கிரே பேன்ட், ஸ்போர்ட் லூப், நைக் பிளஸ், ஹெர்மஸ் மற்றும் செராமிக் கிரே என மொத்தம் 5 வகையான பேண்டுகளில் கிடைக்க உள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளியீடு

 

இந்தியா வருகை

இந்திய சந்தையில் செல்லூலார் வசதி இல்லாத மாடலாக செப்டம்பர் 29ந் தேதி வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 விலை ரூ.29,900 தொடங்கலாம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளியீடு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here