ஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் புதிய மாடல்களில் என்னென வசதிகள் இடம் பெற்றுள்ளது என்பது இங்கே காணலாம்.

2018 ஐபோன் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாது. பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் மெல்லிய பெசல்கள் மற்றும் அதிகளவு ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்ட சாதனங்களில் இடம் பெறும். ஆப்பிள் நிறுவனத்தின் முக அங்கீகார தொழில்நுட்பம் ஐபோன் மாடல்களில் சிறப்பாக வேலை செய்வதால், ஆப்பிள் நிறுவனம் டச் ஐடி தொழில்நுட்பத்தை தனது சாதனங்களில் இம்முறை வழங்க அதிக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.