இந்திய கைப்பேசி தயாரிப்பாளரான இன்டெக்ஸ் நிறுவனம்  இன்டெக்ஸ் மைவாலட் என்ற பெயரில் வாலட் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் டாடா எம்ரூப்பியை அடிப்படையாக கொண்டதாகும்.

இன்டெக்ஸ் மைவாலட்

அதிகரித்து வரும் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஆதரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆப் வாயிலாக மொபைல் ரீசார்ஜ் , டிடிஎச் , மின்சார கட்டணம் , கேஸ் பில் மேலும் பல வசதிகளை பெற வாய்ப்பாக அமையும்.

இன்டெக்ஸ் மைவாலட் ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோர் வாயிலாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மிக சிறப்பபான பாதுகாப்பு அம்சத்தை கொண்ட டாடா Mrupee அடிப்படையாக கொண்டதாகும்.

இதுபற்றி கருத்து தெரிவித்த இன்டெக்ஸ் தலைமை அதிகாரி வினீத் சிங் இது இன்டெக்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவையில் சிறப்பான எம் வாலட் சேவையாக விளங்கும் என தெரிவித்துள்ளார்.