கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய இடம் சார்ந்த அறிவிப்புகளில் ஆப்ஸ் மற்றும் இணையதளங்கள் பற்றி விபரங்களை தரும் நியர்பை (Nearby) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தினை பொருத்து அந்த இடத்தினை சார்ந்த வசதிகளை எளிதாக தெரிந்துகொள்ள இயலும்.

ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைக்க உள்ள வசதியின் வாயிலாக பல கூடுதல் தகவல்களை பெற இயலும்.

நாம் குறிப்பாக ஒரு விமான நிலையத்திற்கு அருகில் இருக்கின்றோம் என்றால் அங்குள்ள விமான சேவை நிறுவனங்களின் ஆப்ஸ் மற்றும் விமான இணையதளங்கள் போன்றவற்றின் தகவல்கள் அறிவிப்புகள் திரையில் தோன்றும் நமக்கு தேவை எனில் பயன்படுத்தி கொள்ளலாம் இல்லையென்றால் ஸ்வைப் செய்தால் அழிந்துவிடும்.

ஆப்ஸ் மற்றும் இணையதள டெவலப்ர்கள் கூகுள் பீகான் மூலம் இடத்தின் தகவலினை இணைத்து கொள்ள முடியும்.