கூகுள் நிறுவனம் மிக தெளிவான வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் கூகுள் டூயோ (Google Duo) செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கூகுள் டூயோ 1-to-1 ஆப் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளலாம்.

சர்வதேச அளவில் டூயோ ஆப் பல நாடுகளில் கிடைக்க ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்கில் கிடைக்கின்றது. உங்களுடைய இணையத்தின் தரத்திற்கு ஏற்ப சிறப்பான முறையில் செயல்படும் வகையிலும் அமைந்துள்ளது.

உங்களின் இணைய இனைப்பு மிக தரமானதாக இருக்கும் பட்சத்தில் சிறப்பான வீடியோ காலிங் கிடைக்கும். உங்களின் இணைய இனைப்பின் தரம் குறைகின்ற பொழுது தானாகவே அதற்கு ஏற்ப உங்களுடைய வீடியோ தரம் குறைவாக தெரியும். மேலும் இணைய வீடியோ காலுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை எனில் இனைப்பு துண்டிக்கப்படாமல் தானாகவே ஆடியோ கால் அழைப்பாக மாறிவிடும் இயல்பினை கொண்டதாகும். சிறப்பான வை-ஃபை இனைப்பு கிடைக்கும் பொழுது தானாகவே வீடியோ கால் சிறப்பாக மாறிக்கொள்ளும்.

உங்கள் மொபைல் எண்ணை கொண்டே டூயா செயலில் கணக்கினை தொடங்கலாம். உங்கள் நண்பரின் வீடியோ அழைப்பு வரும்பொழுது தானாகவே உங்கள் திரையில் அழைப்புகளை ஏற்காத முன்னரே அவர் என்ன செய்து கொண்டுள்ளார் என தெரியும் வசதியை கூகுள் ” நாக் நாக் “ என அழைக்கின்றது.

கூகுள் டூயோ செயலி மிக சிறப்பான தனியுரிமை பாதுகாப்பினை கொண்டதாக என்ட்-டூ-என்ட் என்கிரிப்ஷன் வசதியை கொண்டதாகும்.