கூகுள் பிளே ஸ்டோரில் புதிய அன்இன்ஸ்டால் வசதி வருகின்றதா

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தபவர்களுக்கு மிகப்பெரும் சவாலே மெம்ரி பாரமரிப்பதுதான். விருப்பமான விளையாட்டுகள் , ஆப்ஸ் போன்றவற்றை அதிகம் தரவிறக்கி பயன்படுத்தும் பொழுது மெம்ரி இல்லை என்ற செய்தி வரும்.

வந்தவுடனே எந்த செயலியை நீக்கலாம் என்ற குழப்பத்தினை தீர்க்கும் வகையில் கூகுள் ஆண்ட்ராய்டு  பிளே ஸ்டோரில் புதிதாக அன்இன்ஸ்டால் மேனேஜர் என்ற வசதியை வழங்க கூகுள் முடிவெடுத்துள்ளது. இந்த வசதி பெரும்பாலானோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

அன்இன்ஸ்டால் மேனேஜர் எவ்வாறு செயல்படும் என்றால் நீங்கள் புதிதாக ஒரு அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யும்பொழுது உங்கள் மொபைலில் உள்ள செயலிகளின் நினைவகம் மற்றும் நீங்கள் அதனை பயன்படுத்தும்  தேவை போன்றவற்றை கொண்டு உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷனை நீக்க பரிந்துரை செய்யும்.

இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எதுவானதாக இல்லாமல் உருவாக்குபவர்களுக்கும் மிக குறைவான லைட் வயிட் அப்பளிகேஷனாக வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்தினை உருவாக்குவதே   அன்இன்ஸ்டால் மேனேஜர் நோக்கமாகும். 

Recommended For You