ஜூலை 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறையில் உள்ள சந்தேகங்களுக்கு தீர்வினை வழங்கும் வகையில் ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி ஆப்

ஜிஎஸ்டி வருகைக்கு பின்னர் மக்களுக்கு எழுந்துள்ள பல்வேறு வரி தொடர்பான குழப்பங்களை தீர்க்கும் வகையில் பல்வேறு நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசாங்கம் ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் வாயிலாக ஒவ்வொரு பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள வரி விபரத்தை விரைவாக துல்லியமாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி ஆஃப்லைன் பயன்பாட்டிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை தவிர ஜிஎஸ்டி வரி விபரங்களை அறிய cbec-gst.gov.in என்ற அரசின் இணையதளத்திலும் அனைத்து வரி விரபமும் பதிவேற்றப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்ற இந்த செயலியை தொடர்ந்து ஆப்பிள் பயனாளர்களுக்கும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.