பேஸ்புக் மெசேன்ஜரில் ரகசிய உரையாடல் மற்றும் என்கிர்ப்ஷன்

பேஸ்புக் மெசேன்ஜர் செயிலிலும் சிக்ரெட் கன்வெர்ஷன் மற்றும் வாட்ஸ்அப் மேசேஜ் செயலியை போல எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன் வசதியை வழங்கும் வகையில் செய்ய தொடங்கியுள்ளது.

பேஸ்புக் சமூக வலைதளத்தின் அங்கமான மெசேன்ஜர் சேவையில் மெசேஜ் , படங்கள் , வீடியோ , அழைப்பு வசதி , வீடியோ கால் என பலதரப்பட்ட  தனிநபர் மற்றும் தொழில்சார்ந்த  சேவைகளை வழங்கி வருகின்றது. 900 மில்லியன் மக்கள் மேசேன்ஜர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேசேஜன்ஜரில் இடம்பெற உள்ள ரகசிய உரையாடல் வழியாக பணம் அனுப்புதல் , ஆன்லைன் ஷாப்பிங் , அனிமேஷன் படங்கள், வீடியோக்கள் என தனிநபர் சார்ந்த செய்திகளை குறிப்பிட்ட நபர் மட்டுமே கானும் வகையில் அனுப்பி வைக்கலாம். மேலும் இந்த வசதி ஆப்ஷனலாக வரையறுக்கப்பட்ட அம்சங்களை மட்டுமே கொண்டிருக்கும். மேலும் சிக்ரெட் கன்வெர்ஷனில் டைமிங் கொடுக்கப்படும் ஆப்ஷன் உள்ளது.அதாவது இந்த செய்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் அதாவது 10 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என காலத்தை தேர்வு செய்தால் 10 நமிடங்கள் கழித்து தானாகவே அந்த செய்தி அழிந்துவிடும்.

வாட்ஸ்-அப் செயலியை போலவே அனுப்பியவர்கள் மற்றும் பெறுபவர்கள் மட்டுமே பார்க்கும் வகையிலான எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன் எனப்படும் மூன்றாம் நபர்கள் அனுகமுடியாத  வகையிலான பாதுகாப்பு அமைப்பினை பெற்றிருக்கும்.

பேஸ்புக் மெசேன்ஜரில் இனி பாதுகாப்பாக உரையாடலாம். தற்பொழுது டெஸ்டிங் செய்யபட்டு வரும் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Recommended For You