கூகுள் நிறுவனத்தின் அங்கமான யூடியூப்  வீடியோ பதிவேற்றுதல் தளத்தின் ஆப்ஸ் வழியாக இனி வீடியோக்கள் பற்றி விவாதிக்க மற்றும் மேசேஜ் வழியாக மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க இயலும். இந்த சேவை முதற்கட்டமாக கனடா பயனாளர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது.

யூடியூப் மேசேஜ் சர்வீஸ்

இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் யூடியூப் ஆப்ஸ் வழியாக நீங்கள் பார்க்கும் வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டு விவாதிப்பதற்கும் அதில் குறுஞ்செய்திகள் , படங்கள் போன்றவற்றை அனுப்பி வைக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில பயனர்களுக்கு முதற்கட்டமாக சோதனை ஓட்ட முறையில் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த சேவை மேலும் பல நாடுகளுக்கும் படிப்படியாக கூடுதல் வசதிகளுடன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இந்த சேவையை பெற இயலும்.

மேலும் கூகுள் தெரிவிக்கையில் மற்ற நாட்டினைரை விட கனடாவினர் கூடுதலாக 15 சதவீத யூடியைப் பயன்பாட்டை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் வீடியோ வசதியில் உள்ளதை போன்றே அமைந்திருப்பதனால் அதற்கு போட்டியாக இந்த சேவை செயல்படலாம். இந்த சேவை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என இரு பயனர்களுக்கும் கிடைக்கின்றது.

இது குறித்தான யூடியூப் விளக்க வீடியோ