உலகின் முன்னணி தேடுதல் மற்றும் டெக் நிறுவனமாக விளங்கும் கூகுள் நிறுவனத்தில் சன்டிகரை சேர்ந்த அரசு பள்ளி மாணவருக்கு வருடத்திற்கு 1.44 கோடி ரூபாய் சம்பளத்தில் பணிக்கு அமர்த்தியுள்ளது.

அரசு பள்ளி மாணவர் – கூகுள்

சண்டிகரில் உள்ள செக்டர் 33-ல் உள்ள அரசு மாடல் சீனியர் மேல்நிலை பள்ளி மாணவரான 16 வயது நிரம்பிய ஹர்ஷித் ஷர்மா எனும் மாணவருக்கு கூகுள் நிறுவனத்தின் கிராபிக்ஸ் டிசைனிங் குழுவில் இணைய உள்ளார்.

முதல் வருட பயற்சியின் போது ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ. 4 லட்சம் வழங்க உள்ளதை தொடர்ந்து பயற்சிக்கு பிறகு மாதந்தோறும் ரூ.12 லட்சம் சம்பளமாக கூகுள் வழங்க உள்ளது.

இதுகுறித்து  ஹர்ஷித் ஷர்மா பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் ஆன்லைனில் கிராபிக்ஸ் தொடர்பான வேலையை தேடியபொழுது கூகுள் நிறுவனத்தின் பணிக்கு கடந்த மே மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில் , ஆன்லைனில் நடைபெற்ற நேர்காணலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஜூன் மாத இறுதியில் பணிக்கான நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், ஹர்ஷித் தனது பள்ளி நாட்களில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.