உலகில் கோடிகணக்கான மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் வாட்ஸ்அப் செயலில் புதிதாக வந்துள்ள 5 முக்கியமான வசதிகளை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்..!

வாட்ஸ்ப் வசதிகள்

1. பின் சாட்

உங்கள் விருப்பமான நபரின் சாட்டிங் சேவையை எப்பொழுதும் முதலாவதாக படிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.க்ருப் மற்றும் தனிநபர் என இரண்டையும் பின் செய்து வைத்துக் கொள்ளலாம்.

2. வீடியோ மற்றும் ஆடியோ கால்களுக்கு தனி பொத்தான்

புதிய மேம்பாட்டில் வாட்ஸ்அப் வீடியோ மற்றும் ஆடியோ கால்களுக்கு தனியான பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளது.இதனை புதிய மேம்பாட்டில் பெறலாம்.

3. ஃபைல் ஆப்ஷன் மாற்றம்

படங்கள், வீடியோ மற்றும் டாக்குமென்ட் உள்பட ஃபைல்களை இணைக்கும் ஆப்ஷன் தற்போது கீழே வழங்கப்பட்டு மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

4. ஆப்பிள் பயனர்களுக்கு

ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள ஐபோன் மொபைல் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் செய்திகளை ஆப்பிள் சிரி படிக்கும் வகையிலான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 10.3 இயங்குதளத்துக்கு மேல் இருப்பது அவசியமாகும்.

5. ஸ்டேட்டஸ்

24 மணிநேர புதிய ஸ்டேட்ஸ் பற்றி பலருக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை மற்றும் பழைய வாட்ஸ்அப் டெக்ஸ்ட் ஸ்டேட்டசும் தொடர்ந்து கிடைக்கின்றது.