ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் வெப்ஆப்ஸ் பயனர்களுக்கு  புதிய  மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பிக்ஸ்ட்சிஸ் என்ற பெயரிலான எழுத்தரு வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 1.0 இயங்குதளத்தில் முதல்முறையாக வந்த மோனோஸ்பேஸ் எழுத்தருக்கள் வாட்ஸ்அப் வழியாக புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு பிகஸ்ட்சிஸ் (FixedSys) என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

வெளிவந்துள்ள புதிய மேம்பாட்டு பதிப்பில் முந்தைய பதிப்பின் பிழைகள் போன்றவற்றை மேம்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் பிகஸ்ட்சிஸ் (FixedSys) எழுத்தரு பயன்படுத்துவது எவ்வாறு ?

புதிய வாட்ஸ்அப் ஆப்ஸ் மேம்படுத்திய பிறகு உங்களுடைய வாட்ஸ்அப் செயலில் உள்நுழைந்து பிறகு மெசேஜ் டைப் செய்ய தொடங்குமுன் பின் மேற்கோள்குறி (backquote symbol  ( ` ) மூன்று முறை பதிவு செய்த பிறகு பிக்ஸ்ட்சிஸ் எழுத்தருக்கு மாறிக்கொள்ளும்.

எ.கா உங்கள் மெசேஜ் டைப் செய்யும் பொழுது ”’Gadgets Tamilan”’ என டைப் செய்யும் பொழுது தானாகவே மாறிக்கொள்ளும்.

மேலும் அனுப்பும் அனைத்து டாக்மென்ட்களும் அதாவது பிடிஎஃப் , டாக்ஸ் போன்றவை இனி என்கிரிப்ஷன் செய்யப்பட்டிருக்கும்.

மேலும் மற்ற ஃபோன்ட்களான போல்ட் , இத்தாலிக் மற்றும் ஸ்ட்ரைக்தரவ் தொடருகின்றது.