உலக அரங்கில் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வாய்ப்புகள் பெருகி வருவதனால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கினை முற்றிலும் நீக்குவதற்கான வழிமுறைகளை கானலாம்.

கதீர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொது நலன் வழக்கில் வாட்ஸ் அப் செயலியை எண்ணற்ற இந்தியர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 5ந் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிநபர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அனுப்புபவர் மற்றும் பெறுபவரை தவிர மற்றவர்கள் ‘ 256 பிட் என்கிரிப்ட் ‘  செய்யப்பட்டுள்ள எந்த வாட்ஸ் அப் ஆவனங்களையும் படிக்கவோ தெரிந்துகொள்ளவோ இயலாது என்பதனால் தீவரவாதிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகுந்த சாதகமாக இந்த வசதி அமைந்துள்ளது. இதனால் தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதனால் இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செயல்பாட்டில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களால் கூட அடுத்த 100 வருடங்களில் என்கிரிப்ட் முறையை உடைத்து செய்திகளை படிக்க இயலாது என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

வாட்ஸ்அப் டெலிட் செய்வது எப்படி ?

நாம் வாட்ஸ் அப் செயலில் அனுப்பி செய்திகள் , படங்கள் , நாம் பங்கேற்ற மற்றும் தொடங்கிய குழுக்கள் , வீடியோ , கூகுள் டிரைவ் வழியாக சேமித்தவை என அனைத்து ஆவனங்களையும் எந்த தடையமும் இல்லாமல் அழிக்கும் வகையிலான வழிகள் உள்ளதா ? என தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வாட்ஸ்அப் கனக்கில் உள்நுழைந்து 
முதலில் Menu-> Settings > Account > Delete my account பகுதிக்கு சென்று உங்கள் மொபைல் எண்ணை சர்வதேச முறையில் பதிவு செய்து டெலிட் கொடுக்கவும்.இப்பொழுது உங்கள் வாட்ஸ் அப் கணக்கு முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.

 

 
வாட்ஸ்அப் கணக்கை முடக்குவதற்கு..
உங்கள் மொபைல்போன் தொலைந்திருந்தாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ வாட்ஸ்அப் கணக்கை செயலிழக்க செய்ய கீழுள்ள ஃபார்மெட்டில் மெயில் அனுப்பி வையுங்கள் .. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி ; [email protected]
The email subject should be: ” Lost/Stolen: Please deactivate my account”
email body : Lost/Stolen: Please deactivate my account (your phone number in full international format)
 
 
 
30 நாட்கள் வரை உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருக்கும் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தவில்லை எனில் முற்றிலும் 30 நாட்களுக்கு பிறகு நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும்.
 
வருகின்ற ஜூன் 29ந் தேதி மனு மீதான விசாரணை வரவுள்ள நிலையில் வாட்ஸ்அப் தடை செய்யப்பட்டால் எவ்வாறு நீக்கலாம் என்பதற்கான வழிமுறைகளே ஆகும்.
தடை வேண்டுமா ? வேண்டமா இது பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமால் கமெண்ட் பாக்சில் பேஸ்புக் , டிவிட்ட்டர் , கூகுள் பிளஸ் கனக்கினை பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்.. நன்றி மேலும் பேஸ்புக் பக்கத்தில் கேட்ஜெட்ஸ் தமிழனை விரும்புங்கள் தொடர்ந்து பல செய்திகளை படிக்கலாம்…