பிரசத்தி பெற்ற டப்ஸ்மாஸ் உட்பட சுமார் 16 இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டு சுமார் 620 மில்லியன் கணக்குகளின் பாஸ்வோர்டுலீக் ஆகியுள்ளது. எனவே டப்ஸ்மாஸ் பயனாளர்கள் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

620 மில்லியன் கணக்குகளின் பாஸ்வோர்டு தற்போது டார்க் வெப் எனப்படுகின்ற இணையத்தின் மறுபக்க தளங்களின் வாயிலாக சுமார் $20,000 பிட்காயின் மிதிப்பில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக தி ரிஜிஸ்டர் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

டப்ஸ்மாஸ் ஹேக்கிங்

கடவுச்சொல் திருடப்பட்ட விபரங்களை தொடர்ந்து டப்ஸ்மாஷ் தனது பயனாளர்களுக்கு கடவுசொல்லை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, கீழே வழங்கப்பட்டுள்ள வலைதளங்களின் மூலம் உங்கள் கணக்குகள் இருந்தால் பாஸ்வோர்டினை உடனடியாக மாற்றவும்.

Dubsmash (162 மில்லியன் கணக்குகள்), MyFitnessPal (151 மில்லியன் கணக்குகள்), MyHeritage (92 மில்லியன் கணக்குகள்), ShareThis (41 மில்லியன் கணக்குகள்), HauteLook (28 மில்லியன் கணக்குகள்), Animoto (25 மில்லியன் கணக்குகள்), EyeEm (22 மில்லியன் கணக்குகள்), 8fit (20 மில்லியன் கணக்குகள்), Whitepages (18 மில்லியன் கணக்குகள்), Fotolog (16 மில்லியன் கணக்குகள்), 500px (15 மில்லியன் கணக்குகள்), Armor Games (11 மில்லியன் கணக்குகள்), BookMate (8 மில்லியன் கணக்குகள்), CoffeeMeetsBagel (6 மில்லியன் கணக்குகள்), Artsy (1 மில்லியன் கணக்குகள்), மற்றும் DataCamp (700,000) ஆகியவற்றின் மூலம் தகவல் திருடப்பட்டுள்ளது.

மேலும் இந்த டார்க் வெப் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்ற இந்த தகவல்களில் சில MyHeritage கணக்குள் வழங்கப்பட்டு பரிசோதித்துக் கொள்ள குறிப்பிட்டுள்ளனர். MyHeritage உட்பட சில தளங்கள் தங்கள் தகவல் திருடப்பட்டுள்ளது உண்மை எனக் கூறியுள்ளன.