ஆப்பிள் நிறுவனம், தனது பிரசத்தி பெற்ற ஃபேஸ்டைம் (FaceTime App)  செயலியில் காலிங் பிரச்சனைக்கு, 14 வயது சிறுவனுக்கு நன்றி மற்றும் தனது பயனாளர்களிடம் பகிரங்க மன்னிப்பை கோரியுள்ளது. தற்போது இந்த கோளாறு சரிசெய்வதற்கான மேம்பாடு வழங்கப்பட உள்ளது.

அனைத்து ஐஓஎஸ் 12.1 வெர்ஷன் மற்றும் அதற்குக் கீழான ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் வாடிக்கையாளர்கள், ஃபேஸ்டைம் மூலம் க்ரூப் வீடியோ அழைப்பை மேற்கொள்ளும் போது, ஒருவருக்கு கால் செய்து, அவர்  எடுக்கும் முன்பே, அவரது மைக்கில் வரும் ஒலியைக் கேட்குமாறு இருந்த கோளாறு, அரிசோனாவை சேர்ந்த 14 வயது சிறுவன் இந்த கோளாறை அறிந்து தனது பெற்றோர்களிடம், தெரிவிக்க அவர்கள் ஆப்பிள் நிறுவனத்திடம் இது தொடர்பான புகாரினை பதிவு செய்தனர்.

இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானதை தொடர்ந்து, இந்த கோளாறினை சரி செய்வதற்கு  முன்பாக தற்காலிகமாக குரூப் காலிங் வீடியோ சேவையை நிறுத்திவைத்துள்ளது.

இந்த செயலிக்கு புதிய மேம்பாடு விரைவாக வழங்கப்பட உள்ளதால், இந்த மேம்பாட்டை மேற்கொண்டவுடன் இந்த பிரச்சனை முற்றிலும் சரியாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்பிளின் ஃபேஸ்டைம் வாடிக்கையாளர்களிடம், ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் வாடிக்கையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது.  இதைக் கண்டறிந்த  சிறுவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தற்போது நன்றி ஆப்பிள் தெரிவித்துள்ளது.