ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அப்டேட்டாக வெளிவந்துள ஐஒஎஸ் 12 அப்டேட் செய்வதால், ஐபோன் சார்ஜிங் பிரச்சினை ஏற்படுவதாகவும், மேலும் கால்கள் பிரேக் ஆகுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் நெட்வொர்க் பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாகவும் செய்திகள் தெரிவிகின்றன.

இந்த சாப்ட்வேர்களை அப்டேட் செய்தது முதல் ஐபோன் உரிமையளர்களால், தங்கள் போன்களில் கால்களை செய்யவோ அல்லது ரீசிவ் செய்யவோ முடியவில்லை. ப்ளுடூத் கனெக்டிவிட்டி, வை-பை மற்றும் பேட்டரி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து ஐபோன் தயாரிப்பாளர்கள், மேம்படுத்தப்பட்ட ஐஒஎஸ் 12.0.1 சாப்ட்வேர்களை அறிமுகம் செய்தது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பாக ஐமெசேஜ்-களை வெளியிட்டுள்ளது. இதில் ஐஓஎஸ் 12 சாப்ட்வேரில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் அந்த மெசேஜ்ஜில், ஐஒஎஸ் 12-ல் ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது அனைத்து காண்டேகளும் ஆப்பிள் ஐடி யில் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதாகவும், இந்த ஐடி-ஐ உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.