வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியை பயனாளர்கள் இலகுவாக ட்விட்டரில் கீச்சுகளை வித்தியாசப்படுத்தும் வகையில் சிறப்பு எமோஜிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ எமோஜி

ஆசியா அளவில் நடைபெறுகின்ற மோட்டார் வாகன கண்காட்சியில் முதன்முறையாக டிவிட்டர் சிறப்பு எமோஜிக்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு வழங்கியுள்ளது. இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சம்மேளனத்துடன் இணைந்து இதனை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக நேரலையில் முக்கிய கண்காட்சியின் நிகழ்வுகளை வழங்கும்போது #BlueRoom என்ற ஹேஷ்டேக் கொண்டு வழங்கினால் பாப் அப் திரை தோன்றும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர , #AETMS, #AETMS18, #AUTOEXPO18, #AUTOEXPO2018, #BTNR and #AECompShow18 ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தினால் ஆட்டோ எக்ஸ்போ எமோஜி காட்சித்தருபம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஆட்டோ எக்ஸ்போ எமோஜி பிப்ரவரி 28ந் தேதி வரை ட்விட்டரில் கிடைக்கப்பெறும்.

பெரும்பாலான முன்னணி ஆட்டோ நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா, மாருதி உட்பட டாடா போன்ற நிறுவனங்கள் நேரலையில் கண்காட்சியை ட்விட்டரில் ஒளிபரப்ப உள்ளது.

தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போ செய்திகளை படிக்க – https://www.automobiletamilan.com/motorshow/auto-expo/