ஜூன் 29, 2007 முதல் ஆப்பிள் ஐபோன் சந்தையில் கிடைக்க தொடங்கிய இன்றைய தினத்தில் ஐபோன் பரிமாண வளர்ச்சி மற்றும் மொபைல் வரிசைகளை அறிந்து கொள்ளலாம்.

ஐபோன் பரிமாண வளர்ச்சி

ஜனவரி 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் புரட்சிகரமான மாடல் என்ற பெயரில் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டது.

முதல் ஐபோன் ஜூன் 29, 2007  முதல் ரீடெயிலர்கள் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க தொடங்கியது.

அறிமுகம் செய்த மூன்றே மாதங்களில் 10 லட்சம் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஜூலை மாதம் 2008 ஆம் வருடத்தில் ஐபோன் 3G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது.

ஏப்ரல் 2009ல் ஐபோன் 3GS ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது.

2010 ஆம் வருடத்தில் ஐபோன் 4 விற்பனைக்கு வந்தது.

2011 ஆம் ஐபோன் 4எஸ் விற்பனைக்கு வெளியானது, இந்த மொபைல் வின்கலத்தில் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

2012 ஆம் வருடத்தில் ஐபோன் 5 விற்பனைக்கு வந்தது.

2013 ஆம் வருடத்தில் ஐபோன் 5S & 5C விற்பனைக்கு வந்தது.

2014 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதம் வெளிவந்த ஐபோன் 6 & ஐபோன் 6 பிளஸ் விற்பனைக்கு வந்த ஒரே வாரத்தில் 10 மில்லியன் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டது.

2015 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் வெளிவந்த ஐபோன் 6S & ஐபோன் 6S பிளஸ் விற்பனைக்கு வந்தது.

 

2016 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் வெளிவந்த ஐபோன் SE, ஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸ் விற்பனைக்கு வந்தது.

உலகின் அதிக மதிப்புமிக்க பிராண்டாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தி ஐபோன் மாடல்கள் மொபைல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி செய்த மாடல்களாகும்.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com