இந்தயாவில் குறைந்த வேக இணையத்திற்கு ஏற்ற வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதாரன மெசஞ்சர் ஆப்பை போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட்

சாதாரன மெசன்ஜர் ஆப்பில் உள்ள வசதிகளை போன்றே அனைத்து வசதிகளையும் பெற்ற விளங்குகின்ற இந்த மெசன்ஜர் லைட் ஆப்பில் படங்கள், டெக்ஸட், எமோஜி,இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலில் வாய்ஸ் காலிங் வசதி, ஏக்டிவ் நவ் உள்ளிட்ட வசதிகளுடன் க்ரூப்களை இணைப்பது போன்ற அனைத்து ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களுக்கு 5எம்பி -க்கு குறைவானதாக கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக குறைந்த இணைய வேகம் உள்ள இந்தியா, வியட்னாம், பெரு,ஜப்பான்,ஜெர்மனி, நைஜிரீயா, துருக்கி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்க தொடங்கியுள்ளது.

இதற்கு முன்பாக இதோ போல 1எம்பி அளவில் ஃபேஸ்புக் லைட் செயலி ஒன்றை 2015-ல் ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களுக்கு வழங்கியது இங்கே குறிப்பிடதக்கதாகும்.