உலகின் முன்னணி பிரவுசராக விளங்கும் கூகுள் குரோம் பிரவுசரில் ஆட் பிளாக் ஆப்ஷன் அடிப்பையாக இணைக்கப்பட்டுள்ளது. இனி தனியான ஆட் பிளாக்கரை பயன்படுத்தும் அவசியமில்லை.

குரோம் கேனரி

பிரசத்தி பெற்ற குரோம் பிரவுசரில் பயனாளர்களுக்கு மிகவும் ஏற்ற வகையில்மிக விரைவாக செயல்படுவதனால் பெரும்பாலானோரின் விருப்பமான உலாவியாக உள்ள க்ரோமில் அட்பிளாக் அடுத்த ஆண்டு முதல் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட உள்ளது.

அதற்கு முன்பாக சோதனை ஓட்டத்திற்கு வெளியிடப்பட்டுள்ள குரோம் கேனரி என்ற பெயரிலான பீட்டா பிரவுசர் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் இயங்குதளங்களில் ஆட் பிளாக் அம்சத்துடன் கிடைக்க தொடங்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஆட்சென்ஸ் விளம்பரங்கள் பாதிக்காத வகையிலும், பாப்-அப் விளம்பரங்களை தடை விதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இதனை கூகுள் பிளே ஸ்டோரில் Chrome Canary என்ற பெயரில் தேடி தரவிறக்கி கொள்ளலாம். டெஸ்க்டாப் பயனர்களுக்கும் குரோம் அட் பிளாக்கர் கேனரி என்ற பெயரிலே வழங்கப்பட்டுள்ளது.