கூகுள் நிறுவனம் உங்கள் தேடல்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முக்கிய செய்திகளை வரிசைப்படுத்தும் வகையில் அதனை பின்பற்றும் வகையிலும் கூகுள் ஃபீட் என்ற பெயரில் தொடங்கியுள்ளது.

கூகுள் ஃபீட்

தற்போது கூகுள் நவ் என வழங்கப்பட்டு வருகின்ற சேவையின் அடிப்படையிலே இதே வழங்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் தளங்கள், விளையாட்டு, பிரபலங்கள், விருப்பமான எபிசோடு உள்ளிட்ட அனைத்தையும் ஃபீட் வழியாக பின்பற்ற இயலும், அதனால் உங்கள் முக்கிய செய்திகளை விரைவாக படிக்கலாம்.

உங்கள் விருப்பம் மொபைல் அல்லது டெலிகாம் பற்றி என்றால் இணையத்தில் தரவேற்றப்படும் மொபைல் தொடர்பான செய்திகள் மற்றும் டெலிகாம் தொடர்பான தகவல்களை விரைந்து பெறலாம். இது உங்கள் கூகுள் ஆப் அல்லது தேடல் முகப்பின் கீழே கிடைக்க பெறும். இதில் யூடியூப் காணொலிகளை பெறலாம்.

ஆரம்பகட்டமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்படுத்தும் மொபைல் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவை படிப்படியாக அடுத்த சில வாரங்களில் சர்வதேச அளவில் மொபைல்களுக்கு மற்றும் டெஸ்க்டாப் கணினிகள் என அனைத்துக்கும் ஃபீட்சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளது.