வியாபர மையங்களுக்கு மிகுந்த பயனை வழங்கும் வகையில் கூகுள் மேப்ஸ் எனப்படும் வரைபடம் சாரந்த செயலில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை அல்பாபெட் கீழ் இயங்கும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவ்வப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயற்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் ,புதிதாக கூகுள் மேப்ஸ் செயலியில் இணைக்கப்பட்டுள்ள குறுந்தகவல் அனுப்பும் வசதியானது, தனிநபர் பயன்பாட்டுக்கு என வழங்கப்படவில்லை, அதாவது தனிநபர்கள் வியாபர நிறுவனங்களை இலகுவாக மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறு நிறுவனங்கள் பெருமளவில் வாடிக்கையாளர்களை பெறுவதற்கும், மிகப்பெரிய நிறுவனங்களை மிக இலகுவாக பயனாளர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவலை விரைவாக பெறுவதற்கு உதவி செய்யும் என கூறப்படுகின்றது. முதற்கட்டமாக சில நாடுகளில் வழங்கபட்டுள்ள இந்த வசதி படிப்படியாக சர்வதேச அளவில் விரிவுப்படுத்தப்படக்கூடும்.

சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் டெல்லி வாசிகளுக்கு என பிரத்தியேகமாக ஆட்டோ ரிக்ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது, இது பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.