YouTube Music

YouTube Music:  இந்தியாவில் ஜியோ சாவன், கானா மற்றும் ஸ்பாட்டிஃபை போன்றவற்றை தொடர்ந்து யூடியூப் மியூசிக் (YouTube Music) சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.

விளம்பரம் அல்லாமல், பின்னணியில் பாடல்கள் கேட்க மற்றும் தரவிறக்கம் செய்ய யூடியூபின் மியூசிக் ஆப்பில் கட்டணமாக ரூபாய் 99 வசூலிக்கப்படும்.  எனவே, முதல் மூன்று மாதங்களுக்கு YouTube Music premium சேவை இலவசமாக கிடைக்கும்.

யூடியூப் மியூசிக் பற்றி அறிவோம்

YouTube Music ஆப்

யூடியூப் மியூசிக் மூலம் அதிகாரப்பூர்வமான இசை, ஆல்பங்கள், ஆயிரக்கணக்கான பிளேலிஸ்ட்கள் மற்றும் கலைஞர்களின் வானொலி மற்றும் யூடியூபின் மிகப்பெரிய அட்டவணை ரீமிக்ஸ், நேரலை நிகழ்ச்சிகள், கவர்கள் மற்றும் இசை வீடியோக்கள் போன்றவற்றை ரசிக்க இயலும்.

அனைத்து இசை ரசிகர்களும் இலவசமாக YouTube மியூசிக் சேவையை விளம்பர ஆதரவு பதிப்பாக அனுபவிக்க முடியும், கூடுதலாக யூடியூப் பிரிமியம் மூலம் நீங்கள் விளம்பரமின்றி, பின்னணியில் இசையை பிளே செய்து விட்டு, மற்ற செயலிகளை பயன்படுத்துவது, டவுன்லோட் செய்ய இதன் மூலம் அனுமதிக்கப்படுகின்றது. இதற்கு மாதந்தோறும் ரூபாய் 99 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் இந்தியாவில் ரூபாய் 129 கட்டணத்தில் யூடியூப் பிரீமியம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யூடியூப் மியூசிக், விளம்பரமற்ற வீடியோக்கள், வரம்பற்ற டவுன்லோட், பின்னணியில் பிளே செய்வது உட்பட யூடியூப் ஓரிஜனல்ஸ் வீடியோக்களை பெறலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைல் பயனாளர்களுக்கு முதல் நான்கு மாதம் இலவசமாக YouTube Premium வழங்கப்பட உள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் தற்போது YouTube Music ஆப் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் YouTube Premium வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.

YouTube Music