ஆண்ட்ராய்டு 10 அல்லது ஆண்ட்ராய்டு Q இயங்குதளத்தில் வரவுள்ள முக்கிய விபரங்களை Google I/O 2019 மாநாட்டின் மூலம் கூகுள் அறிவித்துள்ளது. குறிப்பாக டார்க் மோட் , தனியுரிமை, ஸ்மார்ட் வசதிகள், 5ஜி ஆதரவு மேலும் பலவற்றை கொண்டதாக பீட்டா 3 பதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தற்போது 21 மொபைல் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு க்யூ இயங்குதள ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மொபைல்களில் மொத்தம் 13 பிராண்டுகள் இடம்பெற்றுள்ளன. அவை பின் வருமாறு ;-  ஆசுஸ் ஜென்ஃபோன் 5Z, எசென்சியல் பன், ஹூவாவே மேட் 20 ப்ரோ, LG G8 திங்க்யூ, நோக்கியா 8.1, ஒன்பிளஸ் 6T, ஒப்போ ரெனோ, ரியல்மி 3 ப்ரோ, சோனி எக்ஸ்பீரியா XZ3, டெக்னோ ஸ்பார்க் 3 Pro, விவோ X27, விவோ Nex A, விவோ Nex S, சியோமி Mi 9 மற்றும் சியோமி Mi Mix 3 5G.

ஆண்ட்ராய்டு Q சிறப்புகள்

புதிய ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக உங்களது இருப்பிடத்தை பகிரும்போது குறிப்பிட்ட நேரத்தில், இந்த செயலியை பயன்படுத்தும்போது மற்றும் பகிர வேண்டாம் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பதிப்பில் பையோ மெட்ரிக் சார்ந்த பாதுகாப்பு வசதியின் தரம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

5 வது தலைமுறை தொலைத் தொடர்பு சேவை அல்லது 5ஜி எனப்படும் முறைக்கான ஆதரவை ஆண்ட்ராய்டு Q பதிப்பு கொண்டுள்ளது. புதிதாக வழங்கப்பட்டுள்ள 5ஜி ஆதரவு மிக சிறப்பான முறையில் பல்வேறு அம்சங்களை பெற வழி வகுக்கின்றது. மேலும் மடிக்கும் முறையிலான ஸ்மார்ட்போன்களுக்கான இயங்குதள ஆதரவும் வழங்கபட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு லைவ் கேப்சன் வசதி

புதிதாக ஆண்ட்ராய்டு க்யூ பதிப்பில் இணைக்கபட்டுள்ள Live Caption வசதி மூலம் மிக இலகுவாக பேசுவதனை எழுத்துகளில் காண இயலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கவனிக்க வேண்டிய அம்சங்கள்

ஃபேம்லி லிங்க் – பெற்றோர்கள் குழந்தைகளின் மொபைல் செயற்பாட்டினை கண்கானிக்க மற்றும் கட்டுப்படுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ஃபோகஸ் மோட் – நீங்கள் ஒரு முக்கியமான வேலை அல்லது படிக்கும் நேரங்களில் மின்னஞ்சல் , செய்திகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படையானவற்றை தடுத்து உங்கள் கவனத்தை சிதறாமல் வைக்க உதவும்.

டார்க் மோட் – இயங்குதளத்தின் அடிப்படையாகவே லைட் தீம் மற்றும் டார்க் மோட் வழங்கப்பட்டுள்ளது.

அறிவிப்புகளில் ஆப் ஆதரவு – உங்களுக்கு கிடைக்கப் பெறும் அறிவிப்புகளில் இருந்த ஆப்பினை திறக்க அல்லது அதற்கு உண்டான செயலியை பரிந்துரை செய்யும் அம்சம் சேர்கப்பட்டுள்ளது.