ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் லென்ஸ் மேம்பாடு வெளியானது

கூகுள் நிறுவனம் கடந்த உருவாக்குநர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்திருந்த கூகுள் லென்ஸ் எனப்படுகின்ற வசதியின் வாயிலாக மொபைல் போன் கேமரா கொண்டு ஸ்கேன் செய்தால் பூக்கள் முதல் சரித்திர இடங்கள் வரையிலான அனைத்து விபரங்களை உடனே பெறும் வகையில் வெளியாகியுள்ளது.

கூகுள் லென்ஸ்

தற்போது வழங்கப்பட்டுள்ள கூகுள் லென்ஸ் எனப்படும் மேம்பாட்டினை பெற கூகுள் போட்டோஸ் ஆப்பினை மேம்படுத்துவதுடன், கூகுள் அசிஸ்டென்ஸ் வாயிலாக பெறலாம் என கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.

பொதுவாக அனைத்து ஆண்ட்ராய்டு சார்ந்த முன்னணி பிராண்டுகளான சாம்சங், ஹவாய், எல்ஜி, மோட்டோரோலா, சோனி, மற்றும் எச்எம்டி குளோபல் நோக்கியா போன்ற மொபைல்களில் மேம்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்ற ஆண்ட்ராய்டு கருவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் ஆப்பிள் ஐபோன் பயனாளர்களும் பயண்படுத்தும் வகையில் இந்த மேம்பாடு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

லென்ஸ் என்றால் என்ன ? உதாரணத்துக்கு நீங்கள் ஒரு மலர் ஒன்றை புதிதாக பார்ப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் அதனை பற்றி எந்த விபரங்களும் நமக்கு தெரியாது. எனவே, இது போன்ற நேரங்களில் அதனை புகைப்படமாக எடுத்து நண்பர்களிடம் அல்லது அதுபற்றி விபரம் தெரிந்தவர்களிடம் கேட்போம், இதனையே உங்களுக்கு கூகுள் லென்ஸ் செயலி உடனடியாக விநாடிகளில் வழங்க துனைபுரிகின்றது.

செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த செயலி வாயிலாக எந்தவொரு புகைப்படத்தை கொடுத்து தகவல்களை பெறலாம். நீங்கள் ஒரு நிறுவனத்தின் லோகோ அல்லது ஒரு மளிகை கடையின் முகப்பு பலகை படத்தையோ கூகிள் லென்ஸ் வழியாக சோதிக்கும் பொழுது அதுபற்றிய முழுமையான விபரங்களை பெறலாம்.

 

 

கூகிள் லென்ஸ் ஆப் வீடியோ

 

Recommended For You