வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் உங்களுடைய பொக்கிசமாக விளங்கும் பழைய டோட்டோ ஸ்கேன் அல்லது மிக தெளிவாக புதுப்பிக்கும் வகையிலான மொபைல் ஆப்ஸ்களை பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மிகவும் பழைய படங்களை குடும்பத்தின் அறிய பொக்கிஷங்களில் ஒன்றாக விளங்குகின்றது என்பதனை மறுப்பதற்க்கு இல்லை அல்வா … அவற்றை மிக நேர்த்தியாக டிஜிட்டல் உலகின் தரத்துடன் உங்கள் ஆண்ட்ராய்ட்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் வாயிலாக புதுப்பிக்க இயலும் அதற்கு சிறப்பு வசதிகளை வழங்குகின்ற செயலிகளை காணலாம்.

போட்டோ ஸ்கேன் ஆப்ஸ்

1. போட்டோஸ்கேன் (Photoscan)

கூகுள் நிறுவனத்தின் போட்டோஸ்கேன் அற்புதமான சேவையை பழைய படங்கள் மற்றும் உங்களுடைய அறிய படங்களை டிஜிட்டல் முறையில் மாற்ற உதவுகின்றது. போட்டோ மற்றும் ஆப்ஸ் என இரண்டையும் ஒரே சமயத்தில் திறக்கும்பொழுது 4 புள்ளிகளை வழங்குகின்றது. அவற்றை நாம் ஒருங்கிணைத்து தேவைக்கேற்ப சிறப்பான படங்களை பெற்றுக்கொள்ளலாம்.

தரவிறக்க உரலி – Android and iOS

2. போட்டோமைன் (Photomyne)

மிக சிறப்பான முறையில் பழைய போட்டோவை ஸ்கேனிங் செய்து அற்புதமான புதிய படமாக மாற்ற உதவுகின்ற போட்டோமைன் ட்ரெயில் வெர்ஷனில் மூன்று முறைகள் மட்டுமே பயன்படுத்த இயலும். முழுமையாக வாங்குவதற்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளாக கிடைக்கின் போட்டோமைன் முதலிடத்தை பிடிக்கின்றது.

தரவிறக்க உரலி  – Play store and IOS

3. ஷூபாக்ஸ் (ShoeBOX)

பழைய புகைபடங்களை பாதுகாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்றொரு செயலியாக விளங்குகின்ற ஷூபாக்ஸ் உங்களுக்கு சிறப்பான வகையில் தேவைகேற்ற படங்ளை பெற உதவுகின்றது.

தரவிறக்க உரலி iOS  and play store