புகைப்படங்களை பதிவேற்றும் தளமாக தொடங்கி பிரசத்தி பெற்ற இன்ஸ்டாகிராமில்  வீடியோ வசதியை தொடர்ந்து தற்பொழுது லைவ் வீடியோக்களை சேமிக்கும் ஆப்ஷனை வழங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் லைவ்

ஃபேஸ்புக் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ஜியோஸ்டிக்கர்ஸ் வசதியை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து தற்பொழுது நேரலையாக ஒளிபரப்பு செய்யும் வீடியோவினை சேமிக்கும் வகையிலான ஆப்ஷனை வழங்கி உள்ளது.

இந்த ஆப்ஷனை பெறுவதற்கு 10.12 வெர்ஷனை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. இந்த புதிய வசதியை பெறுவதற்கு புதிய மேம்பாட்டினை பெறலாம். சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்னாப்சாட்டில் உள்ள வசதியை வாட்ஸ்அப், மெசேஞ்சர்  மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைத்தது.

வாட்ஸ்அப் செயலில் புதுப்பிக்கப்பட்ட ஸ்டேட்டஸை மாற்றி விட்டு மீண்டும் பழைய ஸ்டேட்டஸை இந்த வார இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது.