ஜியோ போன், ஜியோ போன் 2 வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ரயில் என்ற பிரத்தியேக செயலியை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. ஜியோவின் ஸ்டோரில் ஜியோரயில் ஆப் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஜியோ ரயில் ஆப்

இந்தியாவின் மிகப்பெரிய தரைவழி போக்குவரத்து ரயில் பயணத்தை மேற்கொள்ளும் ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 பயனாளர்கள், தங்கள் மொபைலில் இருந்து டிக்கெட் முன்பதிவு, பிஎன்ஆர் விபரங்களை பெறும் நோக்கில் கெய் ஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் ஜியோஸ்டோரில் இந்த செயலி தரவிறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரு மொபைல் மாடல்களிலும் பிரபலமான வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், மற்றும் யூடியூப் போன்றவை வழங்கப்பட்ட நிலையில், அன்றாட மக்கள் பயன்படுத்தும் ரெயில் சேவை தொடர்பான விபரங்களை ஃபீச்சர் ரக ஜியோபோனில் பெற நாட்டின் மிகப்பெரிய 4ஜி வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ வழிவகுத்துள்ளது.

JioRail சிறப்பம்சங்கள்

ஜியோ ஸ்டோர் மூலம் தரவிறக்கி கொள்ள உள்ள இந்த JioRail ஆப் மூலம் ரயில் பயண அட்டவனை, பிஎன்ஆர் நிலவரங்கள், டிக்கெட் பதிவு செய்த வரலாறு, முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்ய வழி வகுப்பதுடன் முக்கிய வசதியாக தக்கல் முன்பதிவு மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்ய JioRail ஆப் அனுமதிக்கின்றது.

இந்த ஆப் மூலம் டிக்கெட் பதிவு செய்து கட்டணத்தை செலுத்த டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இ-வாலட் போன்றவற்றின் மூலமும் பணத்தை செலுத்த இந்த செயலி அனுமதி வழங்குகின்றது.

தற்போது இந்த செயலி ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 பயனாளர்களுக்கு jioStore ஆப் மூலம் கிடைக்கின்றது.